புதுச்சேரியில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் உருவபொம்மையை நேற்று எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
புதுச்சேரி பாஜக அலுவலகம் முன் இன்று (பிப்., 21) திரண்ட காங்கிரஸ் கட்சியினர் மீது தடியடி நடத்த பாஜகவினர் குவிந்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், பாஜக அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.