மேட்டுப்பாளையம் மெமு ரயில் மீது கல்வீச்சு: ஓட்டுநர் காயம்

3094பார்த்தது
மேட்டுப்பாளையம் மெமு ரயில் மீது கல்வீச்சு: ஓட்டுநர் காயம்
கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் மீது நேற்று முன்தினம் இரவு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே தண்டவாளத்தில் நின்றிருந்த மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை வீசியதில், என்ஜின் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநர் டென்னி தாமஸ் கை மீது விழுந்து காயம் ஏற்பட்டது. இதனால் ரயில் பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி