தங்க நாணய விற்பனை நிறுத்தம்: தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் முடிவு

10973பார்த்தது
தங்க நாணய விற்பனை நிறுத்தம்: தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் முடிவு
இந்தியாவின் அந்நிய செலாவணியை பாதுகாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக, தமிழகத்தில் தங்க நாணய விற்பனையை உடனடியாக நிறுத்துவதாக தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. மேலும், நகை சேமிப்பு மற்றும் ஊக்குவிப்பு திட்டங்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் நிறுத்துவதாக தெரிவித்துள்ள இச்சம்மேளனம், இது குறித்து பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, தற்போது நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி