டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றக் கூட்டத்தில் பேசிய
பிரதமர் மோடி, உலகளாவிய வர்த்தக வளர்ச்சிக்கு பாதுகாப்பான மற்றும் திறந்த நிலையிலான கடல்வழிப் பாதைகள் மிக அவசியம் என வலியுறுத்தியுள்ளார். ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், கடல்வழிப் பாதைகளும் மாலுமிகளும் முழுப் பாதுகாப்புடன் இயங்கும்போது மட்டுமே உலகளவிலான வர்த்தகம் தடையின்றி முன்னேற முடியும் என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.