அமெரிக்கா தங்களைத் தாக்கினால் நிச்சயமாகப் போர்க்களத்தில் திருப்பித் தாக்குவோம் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா வீணான உத்திகளால் மேலும் சிக்கலில் மூழ்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹார்முஸ் நீரிணைப் பகுதி அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் பணியாது என்றும், ஈரானின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே அது திறக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.