சீனாவின் குய்சோ மாகாணத்தில் சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான, தண்ணீரில் வாழும் விசித்திரமான விலங்கின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மிக நீண்ட கழுத்தை கொண்ட இந்த விலங்கின் உடலமைப்பு, சீன புராணங்களில் கூறப்படும் தொன்மவியல் கதைகளின் ‘டிராகன்’ உருவத்தை அப்படியே ஒத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வியப்புடன் தெரிவித்துள்ளனர். 5 மீட்டர் நீளம் கொண்ட இந்த கடல்வாழ் உயிரினம் குறித்து தீவிரமான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.