தெரு நாய் வழக்கு.. தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிமன்றம்

72பார்த்தது
தெரு நாய் வழக்கு.. தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிமன்றம்
டெல்லியில் தெரு நாய்கள் தொல்லை குறித்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், அதன் தீர்ப்பு குறித்த தேதியை வெளியிட்டுள்ளது.  பல மாநிலங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால், தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இன்று தலைமைச் செயலாளர்கள் ஆஜராகி பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் வரும் 7 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி