தவறான காணொளிகளைப் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை - இந்திய ரயில்வே

5288பார்த்தது
தவறான காணொளிகளைப் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை - இந்திய ரயில்வே
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொள்ளும் நிலையில், ரயில் சேவை குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் சேவை பற்றி தவறான மற்றும் பழைய காணொளிகளை பதிவிட்டு வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. எந்த தகவலையும் அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் பகிரக் கூடாது என்று பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி