டாஸ்மாக் காலி பாட்டில் சேகரிப்பு பணியில் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டாமென கோரி பல மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தீர்வு கிடைக்காததால், டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று (டிச.03) கடைகள் அடைத்து வேலைநிறுத்தம் மற்றும் 5 மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தடைகளை மீறி திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடக்கும் என டாஸ்மாக் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.