தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவில்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை 2 வாரங்களுக்குள் மூட முதல்வர் விஜய் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழகம் முழுவதும் 3,000 பார்களை மூடி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூர் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், "கால அவகாசம் கொடுங்கள் அல்லது பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள்" என வலியுறுத்தியுள்ளனர்.