கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்தொடரும் கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை சேமித்து வைத்திருந்தனர். தொடர்ந்து, மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்துள்ளார். பின்னர், பெண்ணின் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி, அதில் அந்த ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட மாணவிகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.