அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் லாரிடோ பகுதியைச் சேர்ந்தவர் பிரியானா அகுலேரா. இவர், கடந்த 29ஆம் தேதி அதிகாலை ஆஸ்டின் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் 17வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இதனை மறுத்த மாணவியின் தாயார், மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.