ராணுவ வீரர் தேர்வில் மயங்கி விழுந்த மாணவர் உயிரிழப்பு

2679பார்த்தது
ராணுவ வீரர் தேர்வில் மயங்கி விழுந்த மாணவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (18) என்ற பி.ஏ. 2-ம் ஆண்டு மாணவர், புதுச்சேரியில் நடந்த ராணுவ வீரர்களுக்கான உடல்தகுதி தேர்வில் பங்கேற்றார். 1.6 கி.மீ. ஓட்டப்பந்தயத்தின்போது திடீரென மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி