கோவை விமான நிலையம் அருகே கடந்த நவம்பர் 2ஆம் தேதி கல்லூரி மாணவி ஆண் நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்தபோது 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ், காளீஸ்வரன், தவசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணை அதிகாரி பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அறிவியல் பரிசோதனை அதிகாரி, தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகள் உள்பட மொத்தம் 6 பேர் சாட்சியம் அளித்தனர்.