திருச்சி அருகே தனியார் கல்லூரியில் தேர்வு எழுத வந்த மாணவி, கழிவறையில் ஆண் குழந்தையைப் பிரசவித்த நிலையில், அக்குழந்தை உயிரிழந்தது. அரியலூரைச் சேர்ந்த 20 வயது மாணவி, தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது வயிற்று வலி ஏற்பட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பெற்றெடுத்த நிலையில், ரத்தப்போக்கு காரணமாக மயக்கமடைந்துள்ளார். கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியையும் குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் காதல் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.