பள்ளி மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை.. இளைஞர் கைது

4122பார்த்தது
பள்ளி மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை.. இளைஞர் கைது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். திடீரென அந்த மாணவிக்கு வயிறு வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 24 வயது இளைஞர் ஒருவரோடு மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், இதில் மாணவி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. தொடர்ந்து இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி