மேற்குவங்கத்தை சேர்ந்த மாணவி சென்னை தரமணியில் உள்ள தனியார் கல்லூரியில் இதழியல் படித்து வருகிறார். தரமணியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோழிகள் இருவருடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த ஒரு நபர் மாணவியின் உடலில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து போதை நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் கோட்டூர்புரம் போலீசில் ஒப்படைத்தனர்.