ஹைதராபாத்தில் ரேசர் பிளேடுகளை விழுங்கிய 16 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து, 3 பிளேடு துண்டுகளை உஸ்மானியா பொது மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். உள்ளுறுப்புகளில் கீறல்கள் மற்றும் காயங்கள் ஏற்படும் அபாயத்தை மிகக் கவனமாகத் தவிர்த்து, அறுவை சிகிச்சையின்றி நவீன ‘இரைப்பை - குடல் எண்டோஸ்கோபி’ (Endoscopy) சிகிச்சை முறை மூலம் பிளேடுகள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.