மாணவர்கள் கைதிற்கு கண்டனம்.. திருவொற்றியூர் காவல் நிலையம் முற்றுகை

22பார்த்தது
நீட் தேர்வை கண்டித்து போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் அடித்து இழுத்து கைது செய்ததாக குற்றம்சாட்டிய அவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி