சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பெண்கள் பள்ளியில் உணவு சாப்பிட்ட சில மாணவிகள் திடீரென வாந்தி, மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவிகளின் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.