ராஜஸ்தான் மாநிலத்தில், சக மாணவர்கள் கிண்டலித்த நிலையில், 9 வயது சிறுமி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில், அமிரா (9) என்ற சிறுமி 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். அம்மாணவி நவ.1 ஆம் தேதி, பள்ளியில் உள்ள 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.