மதுரை: உசிலம்பட்டி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசமாகியுள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நிலையில், மழை நீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிக்கின்றனர். இதுகுறித்து விவசாயி குப்புசாமி கூறுகையில், “நெற்பயிர்கள் நீரிழ் மூழ்கியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடனை திருப்பிக் கேட்கிறார்கள். தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை” என வேதனை தெரிவித்தார்.