கரூரில் ஏற்பட்டதைப்போல விபத்து இனிமேல் ஏற்படக்கூடாது, அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தபின் பேசிய அவர், 'இது ஈடு செய்யமுடியாத இழப்பு. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் இழப்புக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியாது. பிற மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு துணை நிற்கும்' என்றார்.