திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு நடை சாற்றப்பட வேண்டிய நிலையில், பக்தர்கள் அதிகளவில் வருவதால் நள்ளிரவு வரை தரிசனம் நீடிக்கிறது. இதனால், இனிமேல் கட்டண தரிசனத்திற்கு மாலை 6.30 மணி வரையிலும், பொது தரிசனத்திற்கு இரவு 7 மணி வரையிலும் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.