வியாசர்பாடியில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் திடீர் தீ விபத்து

11பார்த்தது
சென்னை பெரம்பூர் அருகே வியாசர்பாடி சுந்தரம் பிரதான சாலையில் உள்ள மின்வாரிய டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மர் பழுதை சரிசெய்யக் கோரி பொதுமக்கள் பல மாதங்களாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (செப்.10) டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி