குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு 80,800 டன் கச்சா எண்ணையுடன் ஜக் லாட்கி கப்பல் வந்து சேர்ந்தது. மேலும் ஜக்வசந்த் பைன்கேஸ் எல்.ஜி.பி கப்பல் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், குஜராத்தில் சில பெட்ரோல் பங்குகளில் திடீரென பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்கு வாடிக்கையாளர்கள் அலைமோதினர்.