சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓடிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கே.எம்.கார்டன் பகுதியில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மாற்றுப் பாதையில் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். பெரக்ஸ் சாலை பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.