வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை.. பயணிகள் பதற்றம்

3853பார்த்தது
விஜயவாடா ரயில் நிலையத்தில் சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பதறியடித்து ரயிலில் இருந்து கீழே இறங்கினர். விசாரணையில், பிரேக் அச்சு அதிகமாக சூடானதால் புகை ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு ரயில் புறப்பட்டது. இதனால் சுமார் 5 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி