ஆற்றில் சர்க்கரை ஆலை கழிவு: செத்து மிதக்கும் மீன்கள்

3999பார்த்தது
ஆற்றில் சர்க்கரை ஆலை கழிவு: செத்து மிதக்கும் மீன்கள்
கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் சர்க்கரை ஆலை கழிவுநீர் கலந்ததால், கம்மியம்பேட்டை தடுப்பணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஆற்றில் விடுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you