வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பெரிய அளவிலான தொழில்முறை நுகர்வோருக்கான சர்க்கரை இருப்பு வரம்பை 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மாதத்திற்கு 10 டன்னுக்கு மேல் சர்க்கரையை மூலப்பொருளாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு பொருந்தும் இத்திட்டத்தில், கூடுதல் 15 நாட்களுக்கான இருப்பு இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரையிலிருந்து மட்டுமே இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.