பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள காபல் நகரில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணியில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதில், குழந்தை, பொதுமக்கள், அதிகாரி மற்றும் போலீசார் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.