ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இத்தாலிய உணவகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். உணவகத்திற்குள் நுழைய முயன்ற பெண்ணை பாதுகாப்பு பணியாளர்கள் தடுத்து நிறுத்தியபோது, அவர் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.