17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அக்கா கணவர் கைது

4987பார்த்தது
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அக்கா கணவர் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூரில், 17 வயது சிறுமிக்கும் 22 வயது இளைஞருக்கும் காதல் மலர்ந்தது. சிறுமியின் பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனிடையே, சிறுமி, நேற்று (மே.22) விஷம் குடித்துவிட்டு நேராக மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு, பெற்றோர் துன்புறுத்தல் மற்றும் அக்கா கணவர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தார். தொடர்ந்து, சிறுமியை மருத்துவமனை அனுப்பி வைத்த போலீசார், அவரது அக்கா கணவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி