கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டார். இது வைரலானதைத் தொடர்ந்து தீபக் தற்கொலை செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அப்பெண் கடந்த ஜன.21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், கோழிக்கோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (பிப்.10) அப்பெண்ணுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. 21 நாட்கள் காவலில் இருந்த பிறகு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.