திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர். ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆனது.