விமான விபத்தில் மறைந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாரை நினைத்து அவரது மனைவியும், துணை முதலமைச்சருமான சுனேத்ரா பவார் உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. இதனை அவரது மகன் ஜெய் பவார் முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், 'அப்பா எப்போதும் எங்கள் இதயங்களில் இருக்கிறார், அம்மா, நாங்கள் அனைவரும் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம், உங்களுடன் இருப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார். அஜித் பவார் கடந்த 28ஆம் தேதி நடந்த விபத்தில் உயிரிழந்தார்.