250 ரன்களை நோக்கி சன்ரைசர்ஸ்: அபிஷேக் சர்மா அதிரடி

26பார்த்தது
250 ரன்களை நோக்கி சன்ரைசர்ஸ்: அபிஷேக் சர்மா அதிரடி
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா வெறும் 47 பந்துகளில் சதம் அடித்து அதிர வைத்துள்ளார். 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் டெல்லி பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த இவரது அதிரடியால், ஐதராபாத் அணி 14.3 ஓவர்களிலேயே 176 ரன்களை எட்டியது. அபிஷேக் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டம் தொடர்வதால், சன்ரைசர்ஸ் அணி 250 ரன்களுக்கும் அதிகமான இமாலய இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.