10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (பிப்., 21) தொடங்குகிறது. இதில், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இரவு நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இதுவரை 49 முறை மோதியுள்ள இவ்விரு அணிகளில், பாகிஸ்தான் 24 முறையும், நியூசிலாந்து 23 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மழையால் இன்றைய போட்டி பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.