தமிழக சட்டசபையில் ரூ.2,914.99 கோடி துணை மதிப்பீடுகள் தாக்கல்

6162பார்த்தது
தமிழக சட்டசபையில் ரூ.2,914.99 கோடி துணை மதிப்பீடுகள் தாக்கல்
தமிழக சட்டசபையில் இன்று (அக்.15) துணை மதிப்பீடுகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் மொத்தம் ரூ.2,914.99 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பணிப்பலன்களுக்காக ரூ.1,137.97 கோடி, பெஞ்சல் புயல் பாதிப்புகளுக்காக ரூ.822.34 கோடி, 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ரூ.471.53 கோடி, மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்காக ரூ.469.84 கோடி ஆகியவை இதில் அடங்கும்.