'மும்பை மராத்தியர்களின் நகரம் அல்ல, பன்னாட்டு நகரம்' என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து, அதை எதிர்ப்பதும் ஏற்பதும் அவரவர் ஜனநாயக உரிமை என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 'மும்பைக்கு வ
ந்தால் அண்ணா
மலையின் கால்களை வெட்டுவேன்' என்று நவ நிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே பேசியது கடும் கண்டனத்திற்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார். அண்ணாமலை ஒரு தனி நபர் மட்டுமல்ல, தமிழ்த்தேசிய இனத்தின் மகன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.