அரசு
வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்த சீரியல் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த பெண்ணுக்கு, அரசு
வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.3 லட்சம் பணம் வாங்கியுள்ளார். பின்னர்,
வேலை வாங்கித்தராமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து, கேட்டதற்கு பெண்ணின் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் தினேஷ் கைது செய்யப்பட்டார்.