திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள முத்துப்பேட்டையில், மதுபோதையில் ரகளை செய்த துணை நடிகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இரட்டையர்களான பாரதிராஜா மற்றும் பாரதமணி ஆகியோர் சினிமாவில் துணை நடிகர்களாக உள்ளனர். போதையில் பட்டாசு வெடித்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட போலீசாரை ஒருமையில் பேசியுள்ளனர். மேலும், போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்திவிடுவதாக மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.