நாட்டில் நீதிமன்ற நிலுவை வழக்குகள் 10-20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை போல் இல்லை என்றும், தொழில்நுட்பத் திட்டங்கள் மூலம் வழக்குகள் விரைவாகத் தீர்க்கப்பட்டு வருவதாகவும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். பெண்கள் தொடுக்கும் வழக்குகள் குறித்துப் பேசுகையில், ஒவ்வொரு வழக்கும் அதன் உண்மைத்தன்மையைப் பொறுத்தது என்றார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய சட்ட சேவைகள் ஆணைய மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.