69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து மைனர் காயத்ரி என்பவர் சார்பில் 2012ல் வழக்கு தொடரப்பட்டது. மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவானது காலாவதி ஆகிவிட்டது. இந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்