நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும், தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, மாணவர்களின் மீதமுள்ள கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதகமான உத்தரவாதத்தை தொடர்ந்து, வரும் செப்.5-ம் தேதி நடத்தவிருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக CJP கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.