சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான ‘புலி’ பட வருமானமாக பெற்ற ரூ.15 கோடியை மறைத்ததாக கூறி IT துறை விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அபராதம் விதித்ததில் தவறு இல்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து விஜய் தரப்பில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.