இன்ஸ்டாகிராமில் 2.2 கோடி ஃபாலோயர்களை கடந்துள்ள 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு' எதிரான வழக்கை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிப்பதற்கான எந்தவொரு அசாதாரண சூழலும் தற்போதைக்கு இல்லை என்று தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை மனுதாரர் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு அணுக வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.