சுராஜின் உறவினர்கள் தவெக மீது பரபரப்பு குற்றச்சாட்டு

6197பார்த்தது
சுராஜின் உறவினர்கள் தவெக மீது பரபரப்பு குற்றச்சாட்டு
சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் நேற்று (பிப்., 13) சுராஜி என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இவர் சேலத்தில் வெள்ளிப்பட்டறையில் பணியாற்றி வந்தார். விஜய்யை பார்க்க சென்ற போது கடும் வெயிலில் நின்றதால் மயங்கி விழுந்து அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுவரை தவெகவைச் சேர்ந்த யாரும் வந்து தங்களை சந்தித்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி