சூர்யாவின் 46வது படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த அறிவிப்புடன் வெளியான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.