நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படத்தில் திரிஷா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று (நவ.9) தொடங்கியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜன.23 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சூர்யாவின் 46-வது படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரியும், 'சூர்யா 47' படத்தை இயக்குநர் ஜீத்து மாதவனும் இயக்குகின்றனர். அடுத்தடுத்து சூர்யாவின் படங்கள் வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.